இங்கு உள்ள எல்லா பதிவுகளும் வேறு தளங்களில் சுட்டது.யாரும் கேஸ் போட்றாதீங்க...ஹி.ஹி..ஹி...அவ்வப்போது சொந்தமாக எழுதப்பட்ட தொழில்நுட்பதிவுகளும் உண்டு.

Friday, October 8, 2010

பிளாகில் பதிவின் தலைப்பை வெவ்வேறு நிறங்களில் கொண்டுவர

இது வந்தேமாதரம் பிளாகிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது.
நாம் எழுதும் பதிவுகளுக்கு ஏற்ற மாதிரி தலைப்பு கொடுப்போம். ஆனால் அந்த தலைப்பு குறுப்பிட்ட நிறத்தில் மட்டுமே வரும்(xml தேர்வு செய்துள்ள நிறம்). அதை எப்படி வெவ்வேறு நிறங்களில் கொண்டு வருவது என்று இங்கு காணலாம். இதற்காக எந்த கோடிங்கயும் டெம்ப்ளேட்டில் சேர்க்க வேண்டியதில்லை எந்த விட்ஜெட்டையும் சேர்க்க வேண்டியதில்லை. மிகவும் சுலபமான வேலை இது நம் தளமும் அழகாக காணப்படும்.

முதலில் நீங்கள் எப்பவும் போல் பதிவு எழுத New post பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு தேவையான தலைப்பை compose மோடில் எழுதுங்கள்.
அடுத்து தேவையான வண்ணத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் தலைப்பு முழுவதும் ஒரே நிறமும் தேர்வு செய்யலாம் அல்லது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு நிறத்தை கொடுக்கலாம் அது உங்கள் விருப்பம்.
தலைப்பு முழுவதும் ஒரே நிறத்தை தேர்வு செய்வதே படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.இது போலவும் செய்யலாம் என்பதற்காகவே நான் இதுபோல் தேர்வு செய்து உள்ளேன்.

உங்களுக்கு தேவையான நிறத்தில் மாற்றி கொண்டு மேலே Edit HTML என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு அந்த தலைப்பிற்கான HTML கோடிங் இருக்கும் அதை அப்படியே காப்பி செய்து TITLE பகுதியில் பேஸ்ட் செய்து விடுங்கள்.

உங்களுடைய பதிவின் தலைப்பு பகுதியில் ஒரே HTML கோடிங்காக இருக்கும் கவலை வேண்டாம் பதிவை பப்ளிஷ் செய்தவுடன் அந்த HTML கோடிங் மறைந்து வெறும் தலைப்பு மட்டும் நமக்கு தெரியும்.
அதுவும் நாம் தேர்வு செய்த நிறங்களுடன் நம் தலைப்பு அழகாக தெரியும்.
நீங்கள் தலைப்பு நிறத்தை மாற்றியதை உறுதி செய்ய கீழே உள்ள PREVIEW என்ற பட்டனை அழுத்தி பார்த்து கொள்ளவும். பின்பு நீங்கள் எப்பவும் போல் பதிவு எழுதி வெளியிடலாம்.
இனி நம் பதிவுகள் அழகாக ஜொலிக்கும்.

Post Comment