இங்கு உள்ள எல்லா பதிவுகளும் வேறு தளங்களில் சுட்டது.யாரும் கேஸ் போட்றாதீங்க...ஹி.ஹி..ஹி...அவ்வப்போது சொந்தமாக எழுதப்பட்ட தொழில்நுட்பதிவுகளும் உண்டு.

Sunday, August 19, 2012

Online-ல் பாடல்களை கேட்கும்போதே Record செய்வது எப்படி..?

சில பாடல்களை இணையத்தில் நாம் கேட்கும்போது அதை நமது கணினியில் பதிவு செய்து வைத்துக்கொண்டு இணையஇணைப்பு இல்லாத போதும் கேட்கலாம் என்று நினைப்போம்.அதற்கு சிறந்த வழிகளில் ஒன்றை காண்போம்.

கூகிளாண்டவரின் தேடல் பக்கத்திற்கு சென்று JET AUDIO PLAYER என்று டைப்பி டவுன்லோடவும்.


பிறகு அந்த ப்ளேயரை திறந்து கொண்டு அதில் வட்டமிட்டு காட்டப்படுடு உள்ள Record பட்டனை அழுத்துங்கள்.

பிறகு இணையத்தில் நீங்கள் கேட்டு மகிழ்ந்த தரவிறக்க முடியாத பாடலை திறந்து கொள்ளுங்கள்.அந்தப்பாடலையும் கேட்பதற்கு தயார் நிலையில் வைத்துக்கொண்டு Jet audio Playerன் Windowவில் நீங்கள் சேமிக்க நினைக்கும் 1.பெயர் 2.இடம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு பாடலை Play செய்தவுடன் Jet Audio Window வில் Start பட்டனை அமுக்குங்கள். 


பாடல் முடியும் வரை கணினியில் எதுவும் நோண்டாமல் கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்கவும். :) பாடல் முடிந்தவுடன் Stop செய்துவிடுங்கள்.அவ்ளோதான்.... Enjoy.

Post Comment

Monday, August 13, 2012

பென் ட்ரைவில் வைரஸ் பிரச்சினையால் அழிந்த பைல்களை மீட்பது எப்படி..?!

இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் நாம் பயன்படுத்தும் பாடல்கள்,புகைப்படங்கள்,வேர்டு,எக்ஸல் பைல்களை கையாள எளிதான வழி பென் ட்ரைவ் மட்டுமே...

ஆனால்,இந்த வைரஸ் பிரச்சினையால் அந்த பைல்களை அவ்வப்போது இழக்க நேரிடுகிறது.நமது கணினியை சுத்தமாகவும்,சுகாதாரமாகவும்,வைரஸ் இல்லாமலும் காத்துக்கொண்டால் கூட நமது நண்பர்கள் கணினியிலோ,ப்ரௌசிங் சென்டர்களிலோ,புகைப்படங்களை ப்ரின்ட் போட கொடுக்கும் கலர் லேப்களிலோ பயன்படுத்த நேரிட்டால் அடுத்த கணமே நமது பென் ட்ரைவ் வைரஸ் குடோன் ஆகி விடுகிறது.

அங்கு பயன்படுத்திவிட்டு வந்து நமது கணினியில் இணைத்த கணமே பென்ட்ரைவில் உள்ள நமக்கு தேவைப்படும் நல்ல பைல்களையும் நாம் பயன்படுத்தும் ஆன்டி-வைரஸ்  ப்ரோகிராம்கள் நல்ல பிள்ளையாக சுத்தமாக அழித்துவிடும்.அதுபோல் தவறுதலாக அழித்த பைல்களை மீட்க நமது ஜன்னலிலேயே(அதாங்க விண்டோஸ்) ஒரு ட்ரிக் உள்ளது.

1.முதலில் பாதிக்கப்பட்டவரை..ச்சீ.பென் ட்ரைவை கணினியில் இணைத்து அதை கணினி ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தவும்.

2.கணினியில் Start>>Run>>பகுதிக்கு சென்று அதில் cmd என டைப் செய்யவும்.

  >>>>
>>>>



அதில் மேலே உள்ள படத்தில் காட்டியவாறு உங்கள் பென்ட்ரைவின் எழுத்தை (F or G or H or I or J என ஏதோஒன்று)
அதில் டைப் செய்யவும்.   அருகில் : (Colon) டைப் செய்ய வேண்டும்.கீபோர்டில் என்டர் கொடுக்கவும்.அதற்கு கீழ் தானாகவே நீங்கள் கொடுத்த எழுத்தும் அதனருகில் :\> இந்த குறியீடுகள் வந்திருக்கும்

attrib -s -h /s /d *.*

அதற்கு அருகில் சிகப்பு நிறத்தில் உள்ள கோடிங்கை சரியாக டைப் செய்ய வேண்டும்.இடைவெளிகளை சரியாக விட வேண்டும்.இல்லைன்னா வராது. கொஞ்சநேரம் கழிச்சு போய் உங்க பென் ட்ரைவை பாத்திங்கன்னா சுத்தமா ஒண்ணும் இருக்காது.ஹி..ஹி... சும்மா டமாஸ். அழிஞ்ச பைல்களை நீங்கள் பார்க்கலாம். மீட்கலாம். 

முக்கியமான விஷயம் என்னன்னா பென் ட்ரைவை நீங்க ஃபார்மட் பண்ணியிருக்க கூடாது.எதாவது டவுட்டுன்னா கேளுங்க...தெரிஞ்சவரைக்கும் சொல்றேன்.ஓகேவா..?!

Post Comment