இங்கு உள்ள எல்லா பதிவுகளும் வேறு தளங்களில் சுட்டது.யாரும் கேஸ் போட்றாதீங்க...ஹி.ஹி..ஹி...அவ்வப்போது சொந்தமாக எழுதப்பட்ட தொழில்நுட்பதிவுகளும் உண்டு.

Sunday, August 19, 2012

Online-ல் பாடல்களை கேட்கும்போதே Record செய்வது எப்படி..?

சில பாடல்களை இணையத்தில் நாம் கேட்கும்போது அதை நமது கணினியில் பதிவு செய்து வைத்துக்கொண்டு இணையஇணைப்பு இல்லாத போதும் கேட்கலாம் என்று நினைப்போம்.அதற்கு சிறந்த வழிகளில் ஒன்றை காண்போம்.

கூகிளாண்டவரின் தேடல் பக்கத்திற்கு சென்று JET AUDIO PLAYER என்று டைப்பி டவுன்லோடவும்.


பிறகு அந்த ப்ளேயரை திறந்து கொண்டு அதில் வட்டமிட்டு காட்டப்படுடு உள்ள Record பட்டனை அழுத்துங்கள்.

பிறகு இணையத்தில் நீங்கள் கேட்டு மகிழ்ந்த தரவிறக்க முடியாத பாடலை திறந்து கொள்ளுங்கள்.அந்தப்பாடலையும் கேட்பதற்கு தயார் நிலையில் வைத்துக்கொண்டு Jet audio Playerன் Windowவில் நீங்கள் சேமிக்க நினைக்கும் 1.பெயர் 2.இடம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு பாடலை Play செய்தவுடன் Jet Audio Window வில் Start பட்டனை அமுக்குங்கள். 


பாடல் முடியும் வரை கணினியில் எதுவும் நோண்டாமல் கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்கவும். :) பாடல் முடிந்தவுடன் Stop செய்துவிடுங்கள்.அவ்ளோதான்.... Enjoy.

Post Comment

0 comments:

Post a Comment