இங்கு உள்ள எல்லா பதிவுகளும் வேறு தளங்களில் சுட்டது.யாரும் கேஸ் போட்றாதீங்க...ஹி.ஹி..ஹி...அவ்வப்போது சொந்தமாக எழுதப்பட்ட தொழில்நுட்பதிவுகளும் உண்டு.

Friday, October 5, 2012

Volume Control செய்வதற்கான மென்பொருள்

Windows XP பயன்படுத்துபவர்கள் Multimedia KeyBoard வைத்திருக்காவிட்டால் Volume Control செய்வதற்கு ஒவ்வொருமுறையும் Volume Icon Use செய்ய வேண்டியிருக்கும். Keyboard-லேயே Shortcut இருந்தால் விரைவாக Control செய்யலாம். அதற்கு உதவும் ஒரு மென்பொருளைப் பற்றி பார்ப்போம்.

இந்த இணைப்பில் மென்பொருளை Download செய்து கணினியில் Install செய்து விடுங்கள்.


System Trayல் இரண்டு Volume Icon கள் வந்திருப்பதை காணலாம்.அதன் மேல் Right click செய்து Settings ல் உங்களுக்கு தேவையான மாறுதல்களை செய்து கொள்ளலாம்.

Default ஆக நீங்கள் Install செய்தவுடன் உங்கள் Keyboard ல் உள்ள Windows Key ஐ அழுத்திக் கொண்டு உங்கள் Mouse ல் உள்ள Scroll Whell ன் மூலம் Volume Control செய்யலாம்.

பயனுள்ளதாக இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Post Comment

Friday, September 21, 2012

யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க பயனுள்ள ட்ரிக்ஸ்!!!

இந்த பதிவு திரு. தங்கம் பழனி அவர்களின் தளத்தில் இருந்து காப்பி செய்யப்பட்டது 

நீங்கள் யூடியூபில் வீடியோ பார்ப்பவரா? உங்களுக்குப் பிடித்த பாடல்கள், படங்கள், வித்தியாசமான வீடியோக்கள், கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் இப்படி உங்களுக்குத் தேவையான வீடியோக்களை நீங்கள் யூடியூப் மூலம் பார்க்கும்போது அது முடிந்தவுடன் மீண்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், மீண்டும் Play செய்து பார்க்க வேண்டும். 

இவ்வாறு Play செய்யும்போது வீடியோவானது மீண்டும் Load ஆகிதான் திறக்கும். வீடியோவானது அதிகநேரம் ஓடக்கூடியது என்றால் வீடியோ திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதைத் தவிர்க்கவும் பார்த்த வீடியோவை மீண்டும் தொடர்ந்து பார்க்கவும் ஒரு ட்ரிக் உள்ளது. 

அதற்கு, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவின் URL-ல் 

Repeat என்ற வார்த்தையைச் சேர்த்தால் போதும். 

உதாரணம் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவின் 
URL http://www.youtube.com/watch?v=-Gq1oPg3LT4&feature=plcp

இப்படி இருக்கும். அந்த URL-ல் youtube என்று முடியும் இடத்தில் repeat என்ற வார்த்தையை தட்டச்சிட்டு என்டர் தட்டுங்கள்.

http://www.youtuberepeat.com/watch?v=-Gq1oPg3LT4&feature=plcp என்ற வார்த்தையை சேர்த்தால் போதும். 

உடனே அந்த Url இந்த தளத்திற்கு ( http://www.listenonrepeat.com/watch/?v=-Gq1oPg3LT4&feature=plcp) redirect ஆகிவிடும். இப்போது இந்த வீடியோவை நீங்கள் தொடர்ந்து பார்வையிடலாம். நீங்கள் நிறுத்தும் வரை வீடியோவானது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

Post Comment

Sunday, August 19, 2012

Online-ல் பாடல்களை கேட்கும்போதே Record செய்வது எப்படி..?

சில பாடல்களை இணையத்தில் நாம் கேட்கும்போது அதை நமது கணினியில் பதிவு செய்து வைத்துக்கொண்டு இணையஇணைப்பு இல்லாத போதும் கேட்கலாம் என்று நினைப்போம்.அதற்கு சிறந்த வழிகளில் ஒன்றை காண்போம்.

கூகிளாண்டவரின் தேடல் பக்கத்திற்கு சென்று JET AUDIO PLAYER என்று டைப்பி டவுன்லோடவும்.


பிறகு அந்த ப்ளேயரை திறந்து கொண்டு அதில் வட்டமிட்டு காட்டப்படுடு உள்ள Record பட்டனை அழுத்துங்கள்.

பிறகு இணையத்தில் நீங்கள் கேட்டு மகிழ்ந்த தரவிறக்க முடியாத பாடலை திறந்து கொள்ளுங்கள்.அந்தப்பாடலையும் கேட்பதற்கு தயார் நிலையில் வைத்துக்கொண்டு Jet audio Playerன் Windowவில் நீங்கள் சேமிக்க நினைக்கும் 1.பெயர் 2.இடம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு பாடலை Play செய்தவுடன் Jet Audio Window வில் Start பட்டனை அமுக்குங்கள். 


பாடல் முடியும் வரை கணினியில் எதுவும் நோண்டாமல் கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்கவும். :) பாடல் முடிந்தவுடன் Stop செய்துவிடுங்கள்.அவ்ளோதான்.... Enjoy.

Post Comment

Monday, August 13, 2012

பென் ட்ரைவில் வைரஸ் பிரச்சினையால் அழிந்த பைல்களை மீட்பது எப்படி..?!

இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் நாம் பயன்படுத்தும் பாடல்கள்,புகைப்படங்கள்,வேர்டு,எக்ஸல் பைல்களை கையாள எளிதான வழி பென் ட்ரைவ் மட்டுமே...

ஆனால்,இந்த வைரஸ் பிரச்சினையால் அந்த பைல்களை அவ்வப்போது இழக்க நேரிடுகிறது.நமது கணினியை சுத்தமாகவும்,சுகாதாரமாகவும்,வைரஸ் இல்லாமலும் காத்துக்கொண்டால் கூட நமது நண்பர்கள் கணினியிலோ,ப்ரௌசிங் சென்டர்களிலோ,புகைப்படங்களை ப்ரின்ட் போட கொடுக்கும் கலர் லேப்களிலோ பயன்படுத்த நேரிட்டால் அடுத்த கணமே நமது பென் ட்ரைவ் வைரஸ் குடோன் ஆகி விடுகிறது.

அங்கு பயன்படுத்திவிட்டு வந்து நமது கணினியில் இணைத்த கணமே பென்ட்ரைவில் உள்ள நமக்கு தேவைப்படும் நல்ல பைல்களையும் நாம் பயன்படுத்தும் ஆன்டி-வைரஸ்  ப்ரோகிராம்கள் நல்ல பிள்ளையாக சுத்தமாக அழித்துவிடும்.அதுபோல் தவறுதலாக அழித்த பைல்களை மீட்க நமது ஜன்னலிலேயே(அதாங்க விண்டோஸ்) ஒரு ட்ரிக் உள்ளது.

1.முதலில் பாதிக்கப்பட்டவரை..ச்சீ.பென் ட்ரைவை கணினியில் இணைத்து அதை கணினி ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தவும்.

2.கணினியில் Start>>Run>>பகுதிக்கு சென்று அதில் cmd என டைப் செய்யவும்.

  >>>>
>>>>



அதில் மேலே உள்ள படத்தில் காட்டியவாறு உங்கள் பென்ட்ரைவின் எழுத்தை (F or G or H or I or J என ஏதோஒன்று)
அதில் டைப் செய்யவும்.   அருகில் : (Colon) டைப் செய்ய வேண்டும்.கீபோர்டில் என்டர் கொடுக்கவும்.அதற்கு கீழ் தானாகவே நீங்கள் கொடுத்த எழுத்தும் அதனருகில் :\> இந்த குறியீடுகள் வந்திருக்கும்

attrib -s -h /s /d *.*

அதற்கு அருகில் சிகப்பு நிறத்தில் உள்ள கோடிங்கை சரியாக டைப் செய்ய வேண்டும்.இடைவெளிகளை சரியாக விட வேண்டும்.இல்லைன்னா வராது. கொஞ்சநேரம் கழிச்சு போய் உங்க பென் ட்ரைவை பாத்திங்கன்னா சுத்தமா ஒண்ணும் இருக்காது.ஹி..ஹி... சும்மா டமாஸ். அழிஞ்ச பைல்களை நீங்கள் பார்க்கலாம். மீட்கலாம். 

முக்கியமான விஷயம் என்னன்னா பென் ட்ரைவை நீங்க ஃபார்மட் பண்ணியிருக்க கூடாது.எதாவது டவுட்டுன்னா கேளுங்க...தெரிஞ்சவரைக்கும் சொல்றேன்.ஓகேவா..?!

Post Comment

Wednesday, August 10, 2011

பின்னூட்டத்தில் இணைப்புகள்(LINK) சேர்க்க

பதிவு எழுதறமோ இல்லையோ பலபேரோட பதிவுகளை படிச்சிட்டு இருப்போம்.படிச்சிட்டு பின்னூட்டம் போடறப்ப நம்ம பிளாக்கை விளம்பரப்படுத்த பயன்படற கோடிங் கீழே...

<a href="URL">Title</a>


இதுல URL ன்னு இருக்கற இடத்துல நம்ம பிளாக் முகவரியும்,Titleன்னு இருக்கற இடத்துல நம்ம என்ன சொல்லனும்ன்னு நெனைக்கறமோ அதை எழுதலாம்.





Post Comment

Tuesday, January 11, 2011

பின்னூட்டம் போட்டு விளையாடலாம் வாங்க பாஸ்!

நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...


ஆம் நீண்ட நாட்களாக பின்னூட்டத்தில் புகைப்படங்கள் வரவைப்பது எப்படி என்று தேடி தேடி அலுத்து சேய் என்னடா இது இவ்ளோ பிரயாசப்பட்டு கிடைக்காமப்போயிடுச்சே என்று நினைத்து கொண்டிருந்தேன். நேற்று தற்செயலாக நீச்சல்காரன் (பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா ஆம் அவரின் பதிவுகளும் கூட வித்தியாசமாகவே இருக்கும் ) பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா? என்று ஒரு பதிவெழுதியிருந்தார்.அப்பொழுது மலர்ந்த புன்னகைதான் அது.பின்ன ஆசைப்பட்டது கிடைத்தால் எவ்வளவு ஆனந்தம் .

உடனே என்னுடைய வலைப்பூவில் செயற்படுத்தி பார்க்கலாம் என்றால் நேற்று மண்டை லேப்டாப்பின் ஸ்கிரீனுக்குள் போகாததுதான் மிச்சம்.அவர் தந்த நிரலி வேலை செய்யவில்லையென்று பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன் . உடனே என்னை மெயிலில் தொடர்புகொண்டு என்னுடைய வலைப்பூவிற்கேற்ற நிரலி செய்து கொடுத்தார் இன்று வந்ததும் அதை செயல் படுத்தி பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

இந்த முறையை உங்கள் பிளாக்கிலும் செயல்படுத்த நீச்சல்காரனின் இந்த பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா லிங் சென்று பார்த்து கொள்ளுங்கள்
மிக்க நன்றி நீச்சல்காரன்...


இனி அதை இந்த பதிவின் பின்னூட்டத்தில் செயல்படுத்தி பார்க்க...

படங்கள் பின்னூட்டத்தில் வர..
[im]________[/im] கோடிட்ட இடத்தில் தங்களுக்கு தேவையான படத்தின் முகவரி கொடுக்கவும்....

எடுத்துக்காட்டாக

நட்புடன் ஜமால் - இவர் சின்ன வயசுல இப்படித்தான் இருப்பாராம் 
[im]http://img1.loadtr.com/b-411981-Funny_Baby.jpg[/im]

பன்னிக்குட்டி ராம்சாமி யாருன்னு தெரியுமோ?
[im]http://static.whatsontv.co.uk/images/07420_125735_117248.jpg[/im]


என்னை திட்டணும்னா


நன்றி சொல்ல

[im]https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdCbg4qLmLPGcex1qf2-PnvPbnUxsWJoekqQ2SytQEu87GdIX6PJGQUWruPOUxUyHQSTl0hFf90qKjkc-AT26i1P_Rwgbqpy7xRXREmEP3I5vDSErFDVkINkU_rs5_rD22uO3unJ11mWc/s1600/tamil+thanks.gif[/im]

[im]http://sanbruno.ca.gov/Library/Newsletter/2008/May%25202008/thankyou.jpg[/im]

வாழ்த்துகளுக்கு 

[im]http://www.orkutpapa.com/scraps/ra-sunbird-congratulations.gif[/im]




இதே படங்கள் ஓட 
[ma][im]________[/im][/ma] கோடிட்ட இடத்தில் படத்தின் url முகவரி கொடுக்கவும்...


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNcQwdGzqbI/AAAAAAAAEZo/yLz1o4O7zyM/s1600/vas.JPG[/im][/ma]


ஓடும் எழுத்துக்களுக்கு


[ma]________[/ma] கோடிட்ட இடத்தில் தங்களுக்கு தேவையான வார்த்தைகளை சேர்க்கவும்...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

மேலே நீலக்கலரில் ஹைலை செய்திருக்கும் எழுத்துக்களை அப்படியே பின்னூட்டப்பொட்டியில் இடவும் .காசா பணமா பின்னூட்டம் போட்டு விளையாடுங்க ஃப்ரண்ட்ஸ் நன்றி! அதுமட்டுமில்லாம இந்த முறை எனக்கு கமெண்ட் போட்டவங்களுக்கு ஸ்பெசலா நன்றி சொல்லப்போறேன் ம்ம்!

Post Comment

Thursday, December 30, 2010

உங்களின் பிளாக்கில் எப்படி scrolling text(also called marquee) சேர்ப்பது?


   இந்த பதிவு நம் தளத்தில் எப்படி scrolling text(also called marquee) சேர்ப்பது என்று பார்போம். இந்த பதிவு உங்களின் தளத்திற்கு வரும் வாசகர்களை கவர மற்றொரு வழியாகவும் இருக்கும். இதை சேர்பதால் உங்களின் தளம் மேலும் அழகு பெரும் என்பதில் சந்தேகமில்லை.மற்றும் உங்களின் வாசகர்களுக்கு உங்களின் அடுத்த பதிவு என்ன என்று தெரிவிக்கலாம்.
வழிமுறைகள்:
    இங்கு பலவகையான scrolling text code கொடுத்துள்ளேன் எது உங்கள் தளத்திற்கு பொரும்துமோ அதை நீங்கள் காப்பி செய்து கொள்ளவும்.

 1.




ரிசல்ட் கீழே : 
code to simple scrolling text




2. 

 உங்களுக்கு தேவையான கலர் கொண்டு வர HEXA DECIMAL(#99CCFF) மாற்றலாம்.ரிசல்ட் கீழே:   

code to simple scrolling text


3.    
 ரிசல்ட் கீழே:
code to simple scrolling text

4.
ரிசல்ட் கீழே:
code to simple scrolling டெக்ஸ்ட்




5.
இந்த கோடினில் உங்களுக்கு தேவையான பக்கத்தின் முகவரியை இதில் சேர்க்கலாம்.
ரிசல்ட் கீழே:

Flash animations in your blog Youtube videos Hexadecimal codes



உங்களுக்கு விருப்பமான html code-ஐ காப்பி செய்து கொண்டு உங்கள் தளத்தில் கீழ் காணும் இடத்தில  
பேஸ்ட் செய்யவும்.
DASSBOARD- LAYOUT- ADD A GADGET - HTML/JAVA SCRIPT- சென்று பேஸ்ட் செய்து விட்டு SAVE கொடுக்கவும் 
அவ்வளவுதான் உங்களின் தளம் மேலும் அழகு பெற்று இருப்பதை உனர்வீர்கள்.

Post Comment