இங்கு உள்ள எல்லா பதிவுகளும் வேறு தளங்களில் சுட்டது.யாரும் கேஸ் போட்றாதீங்க...ஹி.ஹி..ஹி...அவ்வப்போது சொந்தமாக எழுதப்பட்ட தொழில்நுட்பதிவுகளும் உண்டு.

Thursday, December 30, 2010

பிளாக்கில் பதிவின் தலைப்பை நடுவில் கொண்டு வர

நம்முடைய பிளாக்கில் நாம் தினம் பதிவு எழுதி வெளியிடுகிறோம். அப்படி வெளியிடும் போது நம் பிளாக்கில் நம் பதிவின் தலைப்பு இடது பக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கும். சிறிய தலைப்புகளாக இருந்தால் பாதியிலேயே பார்ப்பதற்கு அழகற்று காணப்படும். ஆனால் நம் பிளாக்கின் தலைப்பை நடுவில் கொண்டு வந்தால் நம் பதிவின் தலைப்பு அழகாக இருக்கும். அதை எப்படி நம்முடைய பிளாக்கில் கொண்டு வருவது என இங்கு பார்க்க போகிறோம்.
  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • Design - Edit Html - என்ற பகுதிக்கு செல்லுங்கள்.
  • சென்று .post h3 {  என்ற வரியை கண்டு பிடிக்கவும் (இந்த கோடிங் உங்கள் தளத்தில் சற்று மாறியிருக்க வாய்ப்புள்ளது) . 
  • Ctrl+f உபயோகித்தால் சுலபமாக கண்டு பிடிக்கலாம். உங்கள் கோடிங் கீழே இருப்பதை போல இருக்கும்.
.post h3 {
margin:.25em 0 0;
padding:0 0 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}
இந்த கோடிங்கில் நீங்கள் text-align:center; இந்த ஒரே ஒரு வரியை மட்டும் சேர்த்தால் போதும்.
.post h3 {
text-align:center;
margin:.25em 0 0;
padding:0 0 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}
மேலே காட்டியுள்ள இடத்தில் சரியாக text-align:center; ஒருவரியை மட்டும் சேர்த்து விட்டு கீழே உள்ள PREVIEW பட்டனை அழுத்தி நீங்கள் சேர்த்த கோடிங் வேலை செய்கிறதா என்று கண்டறிந்து பின் SAVE TMEPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும்.


 இப்பொழுது உங்களின் பதிவின் தலைப்புகள் நடுவில் வந்து விடும்.உங்கள் பழைய பதிவுகளின் தலைப்புகளும் தானாகவே மாறிவிடும். அதற்காக edit செய்ய வேண்டியதில்லை. 

Post Comment

0 comments:

Post a Comment