இங்கு உள்ள எல்லா பதிவுகளும் வேறு தளங்களில் சுட்டது.யாரும் கேஸ் போட்றாதீங்க...ஹி.ஹி..ஹி...அவ்வப்போது சொந்தமாக எழுதப்பட்ட தொழில்நுட்பதிவுகளும் உண்டு.

Thursday, December 30, 2010

க்ளிக்கினால் புதிய டேபில்(New Tab) திறக்க

நாம் பதிவில் அதற்கு சம்பந்தமான ஏதாவது லிங்க் கொடுப்பது வழக்கம். அப்படி லிங்க் கொடுக்கும் போது நம் வாசகர்கள் அதை க்ளிக் செய்தால் அது நம் பதிவின் விண்டோவிலேயே லோடு ஆகி வரும் நம் பதிவு மறைந்து விடும். இதன் மூலம் நம் வாசகர்களை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாசகர்களும் திரும்பவும் நம் பதிவிற்கு வரவேண்டுமென்றால் திரும்பவும் நம் URL கொடுத்தோ அல்லது BACK பட்டனை அழுத்தியோ வரவேண்டும். அப்படி வரும்போது நம் பிளாக் திரும்பவும் லோடு ஆகி வரும் இதனால் நம் வாசகர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இதனை தவிர்க்கவே இந்த பதிவு.

நீங்கள் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து கொண்டு
  • DESIGN - EDITHTML - சென்று இந்த வரியை கண்டு பிடிக்கவும் <head>   
  • கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த வரிக்கு கீழே பேஸ்ட் செய்யவும். 
<base target='_blank'/>
உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.    


அவ்வளவு தான் கீழே உள்ள Save Template கிளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை SAVE செய்து கொள்ளுங்கள்.  இப்பொழுது உங்கள் தளம் வந்து நீங்கள் எந்த லிங்க்கில் க்ளிக் செய்தாலும் அடுத்த டேபிள் திறப்பதை காணுங்கள். 

Post Comment

0 comments:

Post a Comment