பயன்கள் :
- நாம் பதிவு போட பிளாக்கர் தளத்திற்கு செல்ல வேண்டியதில்லை.
- ஒரு சில அலுவலகங்களில் நம்முடைய மெயில் தவற மற்ற அனைத்து தளங்களும் வேலை செய்யாதவாறு முடக்கி வைத்திருப்பார்கள் அந்த சமயங்களில் இந்த வசதி மிகவும் துணையாக இருக்கும் .
- நீங்கள் மற்றவர்கள் பார்ப்பதற்கு வேலை சம்பந்தமாக ஏதோ மெயில் தான் அனுப்பி கொண்டிருக்கிறான் என்று தோன்றும். (ஆனால் இதில் உள்ள உள்குத்து நமக்கு தானே தெரியும்)
- இதனால் மேலதிகாரிகளிடம் மாட்டி கொள்வோம் என்ற பயமில்லாமல் செய்யலாம்.
இந்த வசதியை பெற நீங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து
DASSBOARD - SETTINGS - EMAIL&MOBILE - என்ற இடத்திற்கு செல்லவும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் .
- இந்த இடத்தில் காட்டியுள்ளதை போல உங்கள் secret word கொடுக்கவும். (இதை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் ரகசியாமாக வைத்திருங்கள் ஏனென்றால் இதை வைத்து அவர்கள் உங்களுடைய தளத்தில் போஸ்ட் பப்ளிஸ் செய்யலாம்).
- Secret word கொடுத்தபின் Publish email Immediately என்பதை கிளிக் செய்து கீழே உள்ள Save settings என்பதை கிளிக் செய்து விடவும். இப்பொழுது நீங்கள் வெற்றிகரமாக Email via post வசதியை Activate செய்து விட்டீர்கள்.
- உங்கள் இமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். (நான் ஜிமெயில் தேர்வு செய்து உள்ளேன் )
- இங்கு To என்ற இடத்தில் உங்களுடைய பிளாக்கர் மெயில் ஐடியை தரவேண்டும்.
- subject என்ற இடத்தில் உங்களுடைய பதிவின் தலைப்பை தரவேண்டும்.
- ஏதேனும் படத்தை சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் படத்தை Attach seidhu vidavum
- உங்களுடைய பதிவை மெயில் content box ல் கொடுத்து கீழே உள்ள send பட்டனை அழுத்தினால் உங்களுடைய பதிவு உங்கள் பிளாக்கில் பப்ளிஷ் ஆகிவிடும்.
|
0 comments:
Post a Comment